நேற்றைய தினத்தினுள் (29) தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியை கடைபிடிக்காமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2,853 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உரிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படாத 1,223 அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இதுவரை சுமார் 9,495 நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்  மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.