- 5 ஆண்கள், 3 பெண்கள்

- வயதுகள்: 61, 52, 58, 79, 93, 62, 39, 63

- இடங்கள்: கொழும்பு 10, கொழும்பு 15,பொகுணுவிட்ட, இராஜகிரிய, கொழும்பு 15, மடுவல, வாதுவை, கொழும்பு 12;

- இலங்கையில் இதுவரை 313 கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 8 மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே 305 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 8 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 313 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இருவர் நேற்றும் (30), நால்வர் நேற்றுமுன்தினமும் (29), கடந்த வியாழக்கிழமை ஒருவரும் (28), கடந்த புதன்கிழமை (27) ஒருவரும் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.