எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் மற்றும் பொத்துவில் ஆகிய இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்கு பதில் தவிசாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என, அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரீ.எம். றாபி, இன்று (14) தெரிவித்தார்.

இதற்கான அறிவித்தலை, வர்த்தமானி சட்டத்தின் மூலம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் விடுத்துள்ளாரெனவும் அவர் தெரிவித்தார்.

இறக்காமம் மற்றும் பொத்துவில் பிரதேச சபைகளின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்) நிறைவேற்ற முடியாமல் போனதையிட்டு ஏற்பட்ட சிக்கலான நிலமையைத் தீர்ப்பதற்கு விசாரணையொன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டள்ளதாகவும், குறித்த விசாரணை முடியும் வரை மேற்படி சபைகளின் தவிசாளர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இதன்படி, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள தவிசாளர்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் உடனடியாக செற்படும் வண்ணம் இறக்காமம் பிரதேச சபைக்கு உப தலைவரான ஏ.எல். நௌபர், பொத்துவில் பிரதேச சபைக்கு உப தலைவரான பெருமாள் பார்த்தீபன் ஆகியோரின் பெயர்கள் வர்தமானி பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.