2021 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய பொருளாதாரத்திற்கு வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி போன்றவற்றுக்காக அரசாங்கம் பெருந் தொகையை ஒதுக்கியுள்ளது என்றும் மேலும் இது போன்ற எல்லா அபிவிருத்திகளையும் இன்றிலிருந்தே ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

சிங்கள, முஸ்லிம், தமிழ் அனைத்து இன மக்களும் நாட்டில் உள்ள பொதுச் சட்டத்திற்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும் என்றும் அதிமேதகு ஜனாதிபதி எப்போதும் மகா சங்கத்தினரால் வழங்கப்பட்ட வழிகாட்டலை மரியாதையுடன் ஏற்றுக் கொண்டே அரசாங்கத்தை நிர்வாகம் செய்கிறார் என்வும் அவர் கூறினார்.

முஸ்லிம் மதத்தினர் வேறொரு நாட்டிற்குச் சென்றால் அவர்கள் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டும் என்பதை முஸ்லிம் மதத் தலைவர்கள் நன்கு அறிவார்கள் என்றும் கத்தோலிக்கர்கள் இலங்கையில் உள்ள பெளத்தர்களுடன் கை கோர்க்க வேண்டும் என்று பேராயர் மல்கம் ரஞ்சித் கார்டினல் ஆண்டகை சமீபத்தில் கூறியதையும் அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

சுனாமிப் பேரழிவு மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஆகியவற்றில் இறந்தவர்களை தகனம் செய்தார்களா? அல்லது அடக்கம் செய்தார்களா? என்பது எங்களுக்கு இன்னும் தெரியாது என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், கொரோனாவினால் இறந்தவர்களின் பிரேதம் தகனம் யாரையும் பழிவாங்குவதற்காக செய்யப்படவில்லை, மாறாக நாட்டின் சட்டத்திற்கும் ஒட்டு மொத்த மக்களின் ஆரோக்கியத்திற்குமே செய்யப்படுகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

2021 புது வருடத்தின் பணிகளை ஆரம்பித்து வைத்து "உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்" தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் தொம்பே பிரதேச செயலகப் பிரிவில் கட்டப்பட்ட புதிய வீட்டை  பயனாளிக்கு கையளிக்கும் வைபவத்தில்  கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகனத்திற்கு ஏற்ப, கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அறிவிறுத்தலின் பேரில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் " உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்" தேசிய வீடமைப்பு வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வேலைத் திட்டம் நாட்டில் உள்ள 14,022 கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாகும்.

இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக  உட்பட பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

2021.01.02








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.