ஜனாதிபதி மனநிலையை இழந்திருக்க வேண்டும் - அநுர திஸாநாயக்க

Rihmy Hakeem
By -
0

 


நாட்டில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது மனநிலையை இழந்திருக்கவேண்டும் என்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் சீனி விலை அதிகரிக்கும் போதோ, அல்லது நிர்யணிக்கப்பட்ட விலையை விட, வர்த்தகர்கள் அதிக விலையில் விற்பனை செய்தாலோ, ஏன் ஜனாதிபதி அப்போது மனநிலையை இழக்கவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி இவ்வாறான சந்தர்ப்பங்களில் விரைவான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்று கூறியுள்ள அவர், அப்படியாயின், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படும்போது, ஏன் அவர் மனநிலையை இழக்கவில்லை என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

(Tamilmirror)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)