மாவனெல்லை, ஹிங்குல பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி இரவு புத்த சிலை ஒன்றிற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் சந்தேகநபர் மாவனெல்லை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேகாலை, ஹெட்டிமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொலிஸ் ஊடக ​பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், பிரியந்த சம்பத் குமார என்ற நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் போதைப்பொருளுக்கு அடிமையான நபராவார். சந்தேகநபர் இதற்கு முன்னர் வணக்கஸ்தலம ஒன்றில் உண்டியல் ஒன்றை உடைத்து திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் புத்தர் சிலைக்கு அருகில் இருந்து 60 ரூபாவினை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.