கொவிட் ஆனது இன்னும் சமூகப்பரவலை அடையவில்லை என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு அமைய, 3.5 தொடக்கம் 4 சதவீதமானோரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே, 5 சதவீதத்தை கடக்கும் பட்சத்திலேயே சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதாக கருத முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.