மக்களுக்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒன்றிய பிரதிநிதிகள் நேற்று (12) நடாத்திய ஊடக சந்திப்பு.

மன்றத்தின் தலைவரான பேராசிரியர் ஜே.எம்.ஆந்த ஜயவிக்ரம, சமீபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த விதமாக மக்களுக்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒன்றியத்தை உருவாக்கினார்.  சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் போன்ற ஜனரஞ்சக பிரச்சினைகள் மற்றும் பிற அனைத்து பிரச்சினைகளுக்கும் பேராசிரியர்களாக பங்களிப்பு வழங்க வேண்டி தேவை இன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,சிலர் அறிஞர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் உண்மையில் "புத்திஜீவிகள்" அல்லர். மாறாக அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கும் மக்களை தவறாக வழிநடத்துவதற்கும் மட்டுமே அவர்கள் தமது பட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

எதிர்காலத்தில் இதேபோன்ற ஊடக விளக்கங்கள் மற்றும் விரிவுரைகளை நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.நமது நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க சரியான தலைமையுடன் பணியாற்ற அதிக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களை இதில் இணையுமாறு அழைக்கிறோம் என்று தெரிவித்தார்.

அரசியல் குழுவின் தலைவரான பேராதெனிய பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறைப்  பேராசிரியர் உபுல் அபேரத்னே கருத்துத் தெரிவிக்கையில்:

“முன்னர் குறிப்பிட்டபடி, அறிவார்ந்த அமைப்புகள் கடந்த காலங்களில் முளைத்தன, ஆனால் அவை அரசியல் சார்ந்த அமைப்புகளாகும்.இவ்வாறான அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்கள் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளரகளாக  இன்னும் அதிகாரத்தில் உள்ளனர்.  பல்வேறு அரசியல் பிரசங்கங்களை வழங்குவதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்துபவர்கள் உண்மையானஅறிஞர்கள் அல்ல. எங்கள் ஒன்றியத்திற்கு வேறுபட்ட பார்வை உள்ளது. இப்போது நாட்டின் கலாச்சாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. சட்டவிரோத முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இலங்கையில் சிவில் நிர்வாகம் ஒரு இராணுவ ஆட்சியாக மாறி வருகிறது. அதனால்தான் நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கிறோம்.  மன்றத்தின் பொறுப்பு ஐனநாயகத்தைப் பாதுகாப்பதாகும்.நாங்கள் இந்த பொறுப்புடன் உருவாக்கிய ஒரு அமைப்பு. பொருளாதாரம் மற்றும் வேளாண் துறையில் சிறந்தவர்கள் இங்கு உள்ளனர். இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட “எளிய” “வியத்மக”என்று அமைப்புகள் உள்ளன, இப்போது அவர்கள் நாட்டை இருட்டடிப்பதன் மூலம் அதை அழிப்பதற்காக பாசாங்கு செய்கிறார்கள். அதிலுள்ள பல புத்திஜீவிகள் தூரமாகியுள்ளனர்.எமது நோக்கம் அதிகாரத்தைப் பெறுவது மட்டுமல்ல .இது மக்களை தவறாக வழிநடத்தும் ஒரு அமைப்பு இல்லை.  நம்பிக்கையுள்ள ஒரு பார்வை கொண்ட ஒரு அரசியல் கட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம்.  அரசாங்கம் தொடர்ந்து தோல்வியுற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள நினைவுச்சின்னத்தை இடிப்பது தவறான முடிவு என்று அவர் கூறினார்.

ஓன்றியத்தின் துணைத் தலைவர் கலாநிதி அதுல சிறி சமரகோண் கருத்துத் தெரிவிக்கையில்;

கடந்த தேர்தலுக்குப் பிறகு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.ஜனநாயகம் குடும்ப ஆட்சியில் இருந்து விடுபட வேண்டும்.இப்போது ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மோசமாக, பரிதாபமாக தோல்வியடைந்து வருகிறது.  ஜனநாயக ஆட்சிக்கு பதிலாக, இராணுவ ஆட்சி மேற்கொள்ளப்படுகிறது. இராணுவ அதிகாரிகளுக்கு எங்கள் மரியாதை உண்டு.எங்களுக்கு நாட்டில் ஒரு சுயாதீன நீதித்துறை தேவை.

ஆட்சியாளர்கள் புத்துஜீவிகளை தங்கள் பலமாக நியமித்திருந்தாலும், அவர்கள்தான் அவர்களுக்கு ஆலேசனை தருகிறார்கள்.இன்று பொருளாதார வல்லுநர்கள் கொரோனா சமூகம் முழுவதும் பரவி பொருளாதாரம் சரிந்துவிட்டதை சுட்டிக்காட்டுகின்றனர்.  நாட்டில் ஒரு பெரிய மோசடி நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் கருத்தைச் சுதந்திரம் குறைந்து கொண்டிருக்கும் நேரத்தில் பல்கலைக்கழக பேராசிரியர்களாக இதுபோன்ற ஒரு அமைப்பை உருவாக்கும் வாய்ப்பிற்காக கலாநிதி அனுர ஜயவர்தனவும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

மூத்த விரிவுரையாளர் நிஷாந்தா ஹெட்டியராச்சியும் இதில் தமது கருத்துக்களைப் பதிவு செய்தார்.

"பல்கலைக்கழக பேராசிரியர்களாக, நாங்கள் சர்வாதிகாரத்திற்கு எதிராக நிற்கிறோம். 20 ஆவது திருத்தத்திற்குப் பிறகு ஜனநாயகம் மறைந்து வருகிறது. அறிவியலுக்குப் பதிலாக, நாம் கட்டுக்கதைகளைப் பின்பற்றுகிறோம். இலங்கை உலக வரைபடத்திலிருந்து மூழ்கிவிட்டது, நாங்கள் ஒரு எரிமலையை கையில் சுமந்திருக்குறோம் என்று தெரிவுத்தார். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.