நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை பல்லன்சேன தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 4 வருட கடூழிய சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்லன்சேனை தனிமைப்படுத்தல் முகாமுக்கு சற்று முன்னர் அவர் அனுப்பி வைக்கப்பட்டார். 

இதன் போது ஊடகவியலாளர்களிடம், "நான் உண்மையை கூறினேன். பிழை செய்யவில்லை. பிள்ளையானை இந்த அரசாங்கம் விடுவித்தது. என்னை சிறைக்கு அனுப்புகிறது. நான் சந்தோசப்படுகிறேன். ஐந்து சதம் கூட திருடவில்லை. என்னுடைய சம்பளத்தையும் மக்களுக்கு பகிர்ந்தளித்தேன். 4 மில்லியன் கிடைத்தது. அவற்றில் இரண்டையே பகிர முடிந்தது. மக்களுக்கு அரிசியும் வழங்கினேன். என்னை கைது செய்துள்ளனர்.

பிள்ளையானை விடுவித்தது போன்று துமிந்த சில்வாவையும் விடுவியுங்கள் என்று அரசாங்கத்திற்கு கூறுகின்றேன். என்னை கொன்றாலும் பரவாயில்லை. நான் தனியானவன். மன்னிப்பும் கேட்க மாட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.