ஈஸ்டர் தாக்குதலின் பிரதான குண்டுதாரி ஸஹ்ரான் ஹாசிமினால் தற்கொலை தாக்குதலுக்காக 15 பெண்கள் பயிற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மாவனெல்லை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேற்படி விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேற்படி 15 பெண்களில் 5 பேர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மற்றய அனைவரும் தற்போது விளக்கமறியலிலும் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பிலும் உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.