20 ஆவது அரசியல் அமைப்பிற்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியிலும், பொது மக்களிடத்திலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு அமைய மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரசின் அதியுயர் பீடம் நேற்று (13) கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கிம் தலைமையில் கூடியது.

நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹக்கிம், தமக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக 20 ஆவது அரசியல் அமைப்பிற்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறினர். ஆதற்கு எமது உயர்பீடம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. இந்த தவறுக்கு பொது மக்களிடத்தில் மன்னிப்பு கேட்பது அவசியம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு 20 ஐ ஆதரித்த உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டனர் அவர்களின் செயற்பாடு குறித்து எமது உயர்பீடம் கவலையடைகின்றது´ என்றார்.

எவ்வாறாயினும் கொவிட் தொற்றால் உயிரிழக்கும் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதியளிப்பதாக தெரிவித்த உறுதிப்பாட்டுக்கு அமையவே 20 க்கு ஆதரவளித்தாக 20 ஐ ஆதரித்த உறுப்பினர்கள் கூறினர்.

இதன்போது 20ஐ ஆதரித்த முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம். எச்.எம்.எம் ஹரிஸ், எம்.எஸ் தௌபீக் மற்றும் அன்வர் சாமேட் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.












கருத்துரையிடுக

Blogger இயக்குவது.