ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  46 ஆவது கூட்டத்தொடர் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஜெனீவாவில் நாளை (22) ஆரம்பமாகவுள்ளது. இக்கூட்டத்தொடரானது மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை நடைபெறும்.

இம்முறையும் இலங்கையின் மனித உரிமை விடயம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இலங்கை குறித்து  புதிய பிரேரணை ஒன்றும் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ மூலமான கலந்துரையாடலில், பல்வேறு நாடுகளின் மனித உரிமைகள்  விடயம் குறித்து ஆராயப்படவுள்ளது. 

இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, எதிர்வரும் புதன்கிழமை கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார்.

இதன்போது, இலங்கை அரசாங்கம் சார்பில் அவர் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.