இன்று (16) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்த கருத்துக்கள்.

உபாலி அபேயரத்ன தலைமையில் அரசியல் பழிவாங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையை பரிசீலிக்க ஜனாதிபதி குழுவென்று நியமிக்கப்பட்டு சட்ட விரோத தீர்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.பாரதூரமான பிரஜாவுரிமை இழப்பு சார்ந்த நடவடிக்கைகளும் தீர்வுகளாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு கடந்த ஜனவரி 8 ஆம் திகதியிலிருந்து சபாநாயகரிடம் கேட்டு வருகிறோம்.ஆனால் எந்தப் பதில்களும் இன்று வரை இல்லை. பல பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதால் சபாநாயகருக்கு இதில் குறிப்பிட்டளவு பொறுப்புள்ளது.அதே போல் ஜனாதிபதியும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்.எனவே அந்த அறிக்கையை துரிதமாக பாராளுமன்றத்திற்குப் பெற்றுக் கொடுப்பது சபாநாயகரின் பெறுப்பாகும். சபாநாயகரிடம் கேட்கும் போதோல்லாம் அவர் “எனக்கு கிடைத்த உடன்” எனக்கு கிடைத்த உடன் “ என்று கூறுகிறார்.அவ்வாறு கூறி பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.

யாரேனும் குற்றம் இழைத்திருப்பின் நாட்டின் சட்ட மற்றும் நீதிக்கட்டமைப்பின் பிரகாரம் தண்டனை வழங்க வேண்டும். வேறு புற கட்டமைப்புகள் மூலம் தீர்வுகளை வழங்க முற்படக் கூடாது.எங்களுடைய நல்லாட்சி அரசாங்க காலத்திலும் பலர் இவ்வாறு ஆணைக்குழுக்களை நியமித்து துரிதமாக தன்டனை வழங்க வேண்டும் என்று கூறினர்.ஆனால் மைத்திரி-ரணில் தலைவர்கள் இதற்கு இனங்கவில்லை.அரசியல் ரீதியாக இதை அனுக முடியாத நாட்டில் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரமே இவற்றை முன்னெடுக்க வேண்டும் என்று கூறினாரகள்.ஜனநாயகத்தை விரும்பும் தலைவர்கள். ஆனால் இந்த அரசாங்கம் தமது வரையறைகளையும் தான்டி செயற்படுகிறது. இதற்கு சட்டத்தில் எந்த இடமும் இல்லை.

இவ்வாறு அரசியல் காரணிகளை முன்னிலைப்படுத்தி,அது சார்ந்த பழிவாங்கல் இடம் பெற்றது ஜெ.ஆர்.ஜயவர்தன வின் 1981 ஆம் ஆண்டு ஆட்சயிலாகும்.அதற்கு பின்னர் இலங்கை வரலாற்றில் அத்தகைய அரசியல் ரீதியான பழிவாங்கள்கள் சட்ட கட்டமைப்பைத் தான்டி இடம் பெறவில்லை.

தற்போதைய அரசாங்கம் வேறு பாதையில் பயணித்து இத்தகைய நடவடிக்கைகளை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

அபேயரத்ன ஆணைக்கு ஒர் தகவல் சேகரிப்பு (Fact Finding) சார்ந்தது தான்.ஆணைக்குழுவிற்கு தண்டனை வழங்கவோ அல்லது குற்றவாளிகளை அடையாளப்படுத்தவோ அல்லது விடுதலை செய்யவோ எந்த அதிகாரங்களும் ஆணைக்குழுவிற்கு இல்லை.நீதிமன்ற வழக்குகள் நீதிமன்றத்திற்குள் தான் தீர்க்கப்பட வேண்டும்.அபேயரத்ன ஆணைக்குழு இவற்றை தாண்டி பல வழக்குகளிலிருந்து குற்றவாளிகளை விடுவித்துள்ளது.40 கும் மேற்பட்ட வழக்குகளிலிருந்து குற்றவாளிகளை விடுவித்துள்ளது.

சாட்சியாளர்கள் குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.பல வழக்குகளை முற்றாக நீக்கம் செய்துள்ளது.இவ்வாறு ஒர் ஆணைக்குழுவால் மேற்கொள்ள முடியாது.சட்டமா அதிபர் திணைக்களமும் இது குறித்த அதிகார தன்மையை கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.இது அரசியல் பழிவாங்கல்.தீர்ப்பு வழங்க சட்டபூர்வமற்ற ஆணைக்குழு அறிக்கை எவ்வாறு இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

எனவே ஐக்கிய மக்கள் சக்தி இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்.நீதிமன்றத்தை நாடவுள்ளோம். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்.இந் நாட்டு சட்ட கட்டமைப்பில் நாங்கள் பூரண நம்பிக்கை கொண்டுள்ளோம்.ஏனெனில் நல்லாட்சியில் முறை தவறிய பிரதமர் நியமனத்திற்கு எதிராக அப்போதைய அரசாங்கத்திற்கு எதிராக சுயாதீன தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.சட்டத்தின் நிலைபேறை நீதிமன்றம் காப்பாற்றும்.சாதகமான நியாயமான தீர்வு கிடைக்கும் என்று எங்களுக்கு பூரண நம்பிக்கையுண்டு.மேல் நீதிமன்றம் இதை நிராகரிக்கும் என நம்புகிறோம்.

எதிர்க் கட்சி அரசியல் தலைவர்களையும் ஜனநாயக தலைவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வரலாற்றில் பாடங்களை மீள ஞாபகப்படுத்தி படிப்பினை பெறுமாறு இந்த அரசாங்கத்திற்கு கூறுகின்றேன்.வடக்கில் அமர்தலிங்கம் என்ற ஜனநாயக தலைவரை கைது செய்ததால் ஏற்பட்ட இடத்தை ஆயுதம் தாங்கிய பயங்கரவாத குழு நிரப்பியது.தெற்கிலும் அவ்வாறு தான் ஜனநாயக ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜாவுரிமை இல்லாமலாக்கப்பட்ட போது தெற்கிலும் ஆயுதம் தாங்கி மக்கள் விடுதலை முன்னனி அந்த இடங்களை நிறப்பியது.அதன் பின்னர் ஏற்பட்ட நிலை யாவரும் அறிந்ததே.

இன்றும் வடக்கில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ஜனநாயக தலைவர்களையும் அபேயர்தன ஜனாதிபதி அரசியல் பழிவாங்கள் விசாரனை ஆணைக்குழுவின் மூலம் தெற்கின் தலைவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.இது ஜனநாயக முறையல்ல.

தமிழர்களும் முஸ்லிம்களும் அவர்களின் பிரதிநிதிகளும் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்.அவர்களின் ஜனநாயக பங்கேற்பை அங்கீகரிக்க வேண்டும்.இழிவுபடுத்தக் கூடாது.அவர்களின் பிரச்சிணைகளை வேறு யாரிடம் முன்வைக்க முடியும்.

மஹிந்த ராஜபக்‌ஷ பாதை யாத்திரை மேற்கொண்ட போது அப்போதைய ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாச அந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரச பாதுகாப்பை வழங்கினார்.தீர்க்க தரிசனம் மிக்க தலைவர் அவர்.தலைவர்கள் தூர நோக்கில் செயற்பட வேண்டும்.

இந்த அரசாங்கம் வரலாற்றில் பல படிப்பினைகளை கற்றுக்கொள்ள வேண்டும்.மியன்மாரில் ஏற்பட்ட நிலையைக்கு இன்று இங்கு அடித்தளமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மியன்மாரில் இரானுவ ஆட்சி ஏற்பட முன்னர் சிவில் நிறுவாகத்தில் 50% இரானுவத்தினர் தான் இருந்தனர்.இலங்கையும் இதிலிருந்து மீள வேண்டும்.

இலங்கையில் ஜனநாயக தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்.அது எந்த சமூகத்தவர்களாக இருந்தாலும் சரியே.ஏகாதிபத்தியை தோற்கடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அமைச்சரவை அனுமதியுடன் தமது அரச சேவையில் ஒர் அங்கமாக தமது செயற்பாடுகளை முன்னெடுத்த தறபோது அரசியல் பழிவாங்களுக்குட்பட்டுள்ள அரச அதிகாரிகள் குறித்தும் இங்கு கருத்துத் தெரிவித்தார்.

Blogger இயக்குவது.