பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை வரவேற்பதற்கான ஒத்திகை நிகழ்வுகள் நேற்று (19) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, டி-56 ரக துப்பாக்கி ரவைகளை விமான நிலையத்தினுள் எடுத்துச் செல்ல முயற்சித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளப் பொலிஸ் அதிகாரி, மார்ச் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.