இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் இதுவரை தமது தேசிய அடையாள அட்டையை (NIC) இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை எனின், அவர்களுக்காக தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒரு நாள் விசேட சேவையை நாளைய தினம் (26) முன்னெடுக்க ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பி.வீ.குணதிலக்க தெரிவித்துள்ளார்.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட அலுவலகங்களில் நாளை (26) காலை 8.30 தொடக்கம் பி.ப 1.00 மணி வரை மேற்படி சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என,  ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பி.வீ.குணதிலக்க தெரிவித்துள்ளார்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்திரம் இந்த சேவை முன்னெடுக்கப்படுவதால், பாடசாலை அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரால் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை எடுத்து வருமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.