இன்று(17) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிரி தெரிவித்த கருத்துக்கள்.

கொவிட் நிலைமைகளால் நாட்டில் மூன்று நேரம் சாப்பிட முடியாத மக்கள் இருக்கும் போது பிரபுகளுக்கு தடுப்பூசி வழங்குவதை சுகாதாரத்துறை முற்படுத்தியது எவ்வாறு என ஆரம்பித்தல் கேள்வி எழுப்பிய அவர் தொடர்ந்தும் கருத்துத் தொரிவிக்கையில்;

நிதி வளமுள்ள தனியார் துறையினர் செந்த நிதியில் தமது சேவையாட்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தடுப்பூசிகளை வழங்க முன்வந்தாலும் அரசாங்கம் அவரகளுக்கு அனுமதி வழங்காமல் இருப்பதன் பின்புலம் ஏன் என்றும் கோள்வி எழுப்பினார்.தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்கான அனுமதியை திறந்த அடிப்படையில் தனியார் துறைக்கு வழங்கினால் தமது செந்த பைகளுக்கு வரும் வருவாய் இல்ஙாமல் போகும் என்ற அச்சம் இந்த அரசாங்கத்திற்கு உள்ளதாக சுட்டிக் காட்டினார். தடுப்பூசிகளிலும் பாரிய தொகை தொகை பணம் கொள்ளையடிக்கும் வாய்ப்பை பிறருக்கு வழங்குவார்களா? 

இலவசமாக கிடைக்கும் தடுப்பூசிகளை முதலில் தேவையுடய வறிய மக்களுக்கு வழங்குங்கள்.

இந்தியாவின் BJP கட்சியை இலங்கையில் ஆரம்பிப்பதாக கூறுகின்றனர். இதே நிலை நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது இடம் பெற்றிருந்தால் இன்று என்ன நிலை ஏற்பட்டிருக்கும்.இன்று உதய கம்பன்பில, வீரவங்ச போன்றவர்கள் மௌனமாகவுள்ளனர்.

தேசபற்றாளர்கள்.இந்த கட்சி உருவாக்க விடயம் குறித்து அரசாங்கம் பதில் வழங்குகிறார்கள் இல்லை.

இந்த அரசாங்கத்தின் நடத்தைகளைப் பார்க்கும் போது வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் இடம் பெற்றதா என்ற சந்தேகம் எழுகிறது.

உள் நாட்டில் வர்க்க வாதத்தையும் இனவாதத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என்று இந்தியாவிற்கு கூறுகிறோம்.இனவாதத்தால் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தை இந்தியா மேலும் வர்க்க வாத்தை போஷிக்காமல் இருக்குமாறு நாங்கள் கூறுகிறோம். இன்று நாட்டில் பாரிய பிரிவினைவாதம் தோன்றியுள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் கோவிட் மரணங்களை புதைப்பதற்கு அனுமதி வழங்குவதாக வாக்குறுதியளித்து விட்டு 20 ஆவது திருத்தத்திற்கு வாக்குகளையும் பெற்று விட்டு 

இன்று ஏமாற்றியுள்ளனர்.


தேசிய சொத்துக்களை பாதுகாப்பதாக ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று உள்நாட்டு முதலீடுகளுக்குக் கூட அனுமதி வழங்குகிறார்கள் இல்லை.யாழபாணத்தில் மின் உற்பத்திக்கு என்று வழங்கப்பட்டுள்ள மூன்று தீவுகளினதும் முதலீட்டுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் (ADB) கடன் பெற்றுள்ளனர்.இதை தேசிய முதலீட்டாளர்களுக்கு ஏன் வழங்க முடியாது? மறுபக்கம் இந்த திட்டத்திற்காக இந்தியா இலவச நன்கொடை வழங்குகிறோம் என்று கூட தெரிவித்துள்ளது.இதை அரசாங்கம் கிஞ்சிற்றும் கருத்திற் கொள்ளவில்லை.

இன்று இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.வரையறையிட்டுள்ளது.ஆனால் தம்மை சூழவுள்ள நண்பர் கூட்டத்திற்கு அனுமதித்துள்ளது.திறந்த நிலையில் சகலருக்கும் வழங்கினால் அவர்களுக்கு செந்த இலாபம் இல்லாமல் போகும்.இந்த செயற்பாடால் ஏனைய அமைச்சரகளுக்கு உழைக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.இதனால் தான் அரசாங்கத்திறகுள் பாரிய உள்ளக முரண்பாடுகள் தோன்றியுள்ளது.

விமல் வீரவங்ச தானாக முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்று மோலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.