- கொரோனா மரணங்கள் தகன விவகாரம் 

கொரோனாவினால் இறப்பவர்களை எரிப்பது தொடர்பான பிரச்சினையை சர்வதேச மட்டத்திற்கு செல்ல விடாது குடும்ப பிரச்சினையை வீட்டிற்குள்ளேயே தீர்க்க அரசு முன்வர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.

நேற்றுநடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். கொரோனாவினால் இறப்பவர்களை தகனம் செய்வது தொடர்பான பிரச்சினை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தொழில்நுட்ப குழுவை விட உயர்ந்த தகைமை உள்ள நிபுணர்குழு புதைப்பதில் பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளது.

அதனை ஏற்று செயற்பட வேண்டும்.சிறுபான்மைக்கு அநீதியாக செயற்படுவதாக உலக நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.நாமாக ஏன் பிரச்சினையில் சிக்க வேண்டும். சர்வதேசம் வரை இந்த பிரச்சினையை செல்ல விடாது குடும்ப பிரச்சினையை வீட்டிற்குள்ளேயே தீர்க்க வேண்டும்.ஆட்சியாளர்கள் பொறுப்பாக செயற்பட வேண்டும்.பல்இன மக்கள் வாழும் நாடு என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றார். மேலும் குறிப்பிட்ட அவர் ,

இலங்கை பிரிவினைவாத யுத்தங்களுக்கு முகங்கொடுத்தது.வரலாற்றிலிருந்து பாடம் கற்று காயங்களுக்கு மருந்து போட வேண்டும்.காயங்களை மேலும் பெரிதாக்க நாம் தயாரில்லை. எமது நாட்டு பிரச்சினைகளை மட்டுப்படுத்தாவிடின் நாட்டிற்கு தலைதூக்க முடியாது.அரசியல் லாபம் பெறும் நோக்கில் செயற்பட கூடாது என்றார்.

தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்கிய நிலையில் அவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டது. அதனை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ நிராகரித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.