உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கார்தினல் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.

இன்று (20) கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு முன்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பெரும் அறிவு கொண்ட ஆளுமைகளால் தயாரிக்கப்பட்டதாகும். சாதாரண தரம் கூட சித்தியடையாதவர்களால் அது குறித்து முடிவெடுப்பதனை எவ்வாறு நாம் அனுமதிக்க முடியும்? என்று அவர் மேலும் தெரிவித்தார். (RH)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.