நேற்றைய தினம் பதிவான கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 172 பேர், கம்பஹா மாவட்டத்தில் 168 பேர், கண்டி மாவட்டத்தில் 73 பேர், களுத்துறை மாவட்டத்தில் 64 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 64 பேர், குருநாகல் மாவட்டத்தில் 32 பேர் மற்றும் பதுளை மாவட்டத்தில் 30 பேரும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களுள் அடங்குவர்.

மேலும் புத்தளம் மாவட்டத்தில் 25 பேர், அம்பாரை மாவட்டத்தில் 22 பேர், மாத்தளை மாவட்டத்தில் 18 பேர், அனுராதபுர மாவட்டத்தில் 17 பேர், மாத்தறை மாவட்டத்தில் 15 பேர் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் 12 பேரும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் காலி மாவட்டத்தில் 11 பேர் மன்னார் மாவட்டத்தில் 9 பேர், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 7 பேர், பொலன்நறுவை மாவட்டத்தில் 6 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பேர் மற்றும் கேகாலை மாவட்டத்தில் மூன்று பேரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வவுனியா மாவட்டத்தில் 2 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 2 பேர் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் ஒருவரும் நேற்றையதினம் பதிவாகியுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.