கல்வி பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சைக்காக வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்களுக்கு அமைவாக அனைத்து ஊழியர்களும், பரீட்சாத்திகளும் தத்தமது முகவரி, சுகாதார பரிசோதனையில் ஈடுப்படுத்தி தனிமைப்படுத்தல் பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல என வலியுறுத்தி உறுதிப்படுத்தல் ஆவணம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

பரீட்சை நடைபெறும் சந்தர்ப்பத்தில் யாருக்காவது கொவிட் தொற்று அறிகுறிகள் தென்படுமாயின், அவர்களுக்கான அறை ஒன்றை பரீட்சை நிலையத்திற்குள் தயார் படுத்தி வைத்திருக்க வேண்டும். அவருக்கும் அன்றைய தினம் பரீட்சை எழுதுவதற்கு வசதிகள் செய்யப்பட வேண்டும். சமூகமளித்தமையை பதிவு செய்வதற்காக மாத்திரம் பேனை ஒன்றை பயன்படுத்துவது முக்கியமாகும்.

கணிப்பான் இயந்திரம் மற்றும் ஏனைய ஆவணங்களை கைமாற்றி பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஓய்வு நேரங்களிலும் பரீட்சை நேரத்திற்கும் இடைப்பட்ட பகுதியிலும் ஒவ்வொருவருடன் ஒன்று சேர்வது, உணவு பரிமாறல் செய்வது போன்றவைக்கு இடமளிக்க கூடாது.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.