கஹட்டோவிட்டாவில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக தபால் விநியோகப்பணி புரிந்த A.W.M மஹிபால ஓய்வு பெற்றதையடுத்து இன்றைய தினம் அவரை கௌரவித்து பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு ஒன்று கஹட்டோவிட்ட தபால் நிலையத்துக்கருகாமையில் இன்று (28) காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரை இடம்பெற்றது.

இந்நிகழ்வை கஹட்டோவிட்ட உப தபால் நிலையத்தின் பொறுப்பதிகாரி முனீரா அவர்களின் ஏற்பாட்டில் சமூக சேவகர் கஹட்டோவிட்ட 369 ஏ கிராமஅபிவிருத்தி சங்கத்தின் தலைவர் அல் ஹாஜ்பிர்தௌவ்ஸ் அவர்களின் பங்களிப்போடு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் கஹட்டோவிட்ட முஹிய்யத்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் கதீப் பர்ஸான் முர்ஸி ,கஹட்டோவிட்ட காதிரிய்யதுன் நபவிய்யா தக்கியா ஆலிம் ஏ எச் அப்துல் பாரி ஆலிம் B.A.Kuwait  அவர்களும் ,கஹட்டோவிட்ட முஹிய்யத்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அல் ஹாஜ் நஜீம்,கஹட்டோவிட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் தலைவர் அல் ஹாஜ் அதாவுள்ளாஹ்,கஹட்டோவிட்ட கிளை ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் மௌலவி அப்துஸ்ஸலாம் பலாஹி உட்பட மற்றும் பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

நிகழ்ச்சியை சட்டத்தரணி அஸ்லம் அவர்கள் தொகுத்து வழங்கியதுடன் நிகழ்வில் சமூக சேவகர் அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் ,சகோதரர் இக்ராம் ,தபால் உத்தியோகத்தர் சகோதரி முனீரா போன்றவர்களின் உரையும் நிகழ்வின் கதாநாயகன் மஹிபாலவின் உரையும் இடம்பெற்றதுடன் தனதுரையில் தனக்கு ஏற்கனவே இவ்வாறான பாராட்டு விழா நடாத்தியதாகவும் தாம் இந்த நிகழ்வை செய்ய வேண்டாம் காலத்தில் கஷ்டமான நிலையில் அவசியம் இல்லை என்று சொல்லி இருந்த போதிலும் தபால் நிலைய உத்தியோகத்தர் சகோதரி முனீரா அவர்களின் ஏற்பாட்டில் இந்த வைபவம் நடைபெறுவதை இட்டு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் யாரெல்லாம் இதற்காக பாடுபட்டார்களோ பரிசுப்பொருட்களை நினைவு சின்னங்களை வழங்கி கௌரவப்படுத்தினார்களோ அவர்களுக்கும் வருகை தந்த எல்லோருக்கும் நன்றிகளை கூறியதுடன் இறுதியில் ஒரு பாட்டையும் படித்து முடித்து உரையில் இருந்து விடை பெற்றார்.

இதையடுத்து ஓய்வு பெற்று செல்லும் A.W.M மஹிபாலவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பரிசுப்பொருட்களும் ,நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் கஹட்டோவிட்ட வாழ் மக்களின் சார்பில் பல பரிசுப்பொருட்கள் அடங்கிய ஒரு  பொதியை மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் தலைவர் அதாவுள்ளாஹ் அவர்களும், முஹிய்யத்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் கதீப் பர்ஸான் முர்ஸி மற்றும் புகாரி தக்கியா ஆலிம் அப்துல் பாரி ஆலிம் இணைந்து மற்றும் ஒரு பொதி பரிசுப்பொருட்தொகுதியையும் வழங்கி வைக்கப்பட்டதுடன்,

கஹட்டோவிட்ட தபால் நிலையத்தின் சார்பில் சகோதரி முனீரா அவர்களினால் நினைவு சின்னம் ஒன்றை வழங்கி வைத்ததுடன்,கஹட்டோவிட்ட நியுஸ் பேஜ் ஒபீஸியல் சார்பிலும் அவரது சேவையை கௌரவிக்கும் முகமாக நினைவுப்பரிசில் ஒன்றை ஏற்பாடு செய்திருந்ததுடன் இந்த நினைவு சின்னத்தை சட்டத்தரணி ருஸ்மி அவர்களின் கரத்தினால் வழங்கி வைக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.

நன்றி : http://www.kahatowitanews.com/













கருத்துரையிடுக

Blogger இயக்குவது.