மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் தரம் 05, சாதாரண தர மற்றும் உயர் தர வகுப்புக்களை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ளார்.

ஏற்கனவே இன்று காலை (08) கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், எதிர்வரும் 15 ஆம் திகதி மேல் மாகாணம் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள சகல பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சின் செய்தித்தொடர்பாளர் கருத்துத்தெரிவிக்கையில், “சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கிருப்பதனால் எம்மால் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் தரம் 05, சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புக்களை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்க முடியும்” என்றார். (RH)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.