மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் மேற்கொண்ட கிளர்ச்சியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தையடுத்து அந்நாட்டில் பதட்ட நிலைமை உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. 

 மியன்மாரில் கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி ஆங் சாங் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை கைது செய்து இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதற்கு எதிராகவே மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.   

இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அடக்க முற்பட்ட போது 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.   (மு) 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.