ஒப்பீட்டளவில் குறைந்த மாணவர்களை கொண்ட அரச பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நான்கு மாதங்களில் திட்டம் தயாரிக்கப்படவுள்ளதாக  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இது பற்றி மேலும் தெரியவருவதாவது, 

ஒப்பீட்டளவில் குறைந்தளவு மாணவர்களை கொண்ட அரச பாடசாலைகளின் செயல்திறனை ஆய்வு செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு  பாராளுமன்றத்தில் கூடியது. 

இந்த பாடசாலைகளில் காணப்படும் நீர் பிரச்சினைகள் உள்ளிட்ட கழிவறை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குழுவில் ஆராயப்பட்டுள்ளது. பாடசாலைகள் தொடர்பில் முறையான ஒருங்கிணைப்பு இன்மை காரணமாக வள ஏற்றத்தாழ்வு இருப்பதாகவும் குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

மாணவர்கள் தொகை 200 பேரை விட குறைந்த 5,161பாடசாலைகள் இந்நாட்டில் உள்ளதாகவும், அவ்வாறான பல்வேறு பாடசாலைகளின் தரம் தொடர்பில் பல சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், அது தொடர்பில் கண்டறியவேண்டும் எனவும், அதற்கான வளவாளர்களை தொண்டர் அடிப்படையில் இணைத்துக் கொள்ளுமாறும் குறித்த குழு, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவுக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.  (மு)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.