அண்மையில் எவ்விதமான காரணங்களும் இன்றி, இரவு வேளையில் வீதியில் நடமாடிய பெண்கள் நால்வர் கைது செய்யப்பட்ட சம்பவம் யாவரும் அறிந்ததே, அந்த நான்கு பெண்களுக்கும் தலா 50 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்த நால்வருக்கு எதிராகவும் “ தெருக்களில் அநாவசியமாக சுற்றிதிரிதல்” என்ற குற்றச்சாட்டு முன்வைக்கபட்டது.
குறித்த பெண்கள் நால்வரும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (22) ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவர்களுக்கு தலா 50 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. (Siyane News)
தமிழ் மிரர்