இன்று(17) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்த கருத்துக்கள்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு கருதி கொரோனா நிலைமைகள் காரணமாக மீள நாட்டிற்கு வர முடியாமல் இருக்கும் தொழிலாளிகளுக்கு ஆதரவாக எதிர் வரும் வெள்ளிக்கிழமை கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் வெளி நாட்டில் தொழில் புரியும் சகல குடும்ப அங்கத்தவர்களையும் கட்சி பேதமின்றி கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம்.ஆட்சிக்கு வர இவர்களுடமிருந்து வாக்குகளைப் பெற்ற இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அதிலும் முழு உலகும் கொரோனா சிக்கலுக்கு முகம் கொடுத்து பாரிய சவால்களை சந்தித்து வரும் ஓர் இக்கட்டான நிலையில் நமது நாட்டுப் பிரஜைகளான அவர்கள் குறித்து அரசாங்கம் கவனிக்காமை மனிதாபிமானமற்ற செயலாகும்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு  பணியகத்தில் தமது காப்புறுதிக்காக வழங்கிய மொத்த நிதியாக 14 பில்லியன் தற்போதும் கையிருப்பில் உள்ளது பாராளுமன்ற கோப் குழுவிலும் உறுதியாகியது. பாராளுமன்றத்தில் வினவியபோது வெளிநாட்டு தொழிலாளின் நலன்களுக்காக 14 பில்லியனில் வெறும் 11 மில்லியனே ஒதுக்கப்பட்டதாக துறை சார்ந்த அமைச்சர் குறிப்பிட்டார். இந்த மொத்த நிதியைப் பயன்படுத்தி மீள அழைத்து வர அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

இன்று பலர் தமது வருடாந்த விடுமுறைக்காக செந்ந நிதியில் நாட்டிற்கு வர முற்ப்பட்டாலும்,இலங்கை அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொரோனா தனிமைப்படுத்தல் நடைமுறைகள் காரனமாக பாரிய சிக்கல்களை எதிர் நோக்கியுள்ளனர். 14 நாட்கள் வேறாக்கப்பட்ட இடங்களில் தனிமைப்படுத்தல்களுக்கு செல்வதால் சிலருக்கு தமது வருடாந்த விடுமுறையே முடிந்து விடுகிறது.இவ்வாறு அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு பணம் செலுத்தயவர்களுக்கு தான் அனுமதி வரங்குகிறார்கள்.பலர் தாம் உழைத்த பணத்தின் சேமிப்பை இழக்க வேண்டி வருகிறது. வருடமொன்றிற்கு 7 பில்லியன் அந்நியசெலாவினையைக் கொண்டு வரும் இவர்கள் குறித்து அரசாங்கம் துரிதமாக கவனம் செலுத்த வேண்டும்.

பிற நாடுகள் கடைப்பிடிக்கும் ஒருங்களின் பிரகாரம் குறைந்த செலவில் அல்லது இலவசமாக தொழிலாளிகளை அழைத்து வர அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.12 இலட்சம் இலங்கையர்கள் இவ்வாறு பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை மக்களிடமிருந்து தூரமாக்கும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது. அவதானங்களை திசை திருப்ப இன்று புர்கா தடையைப் முன்னிலைப்படுத்தி இனவாத கருத்துக்களை தூன்டிவிடுகின்றனர்.

2012-2015 காலப்பகுதியில் சஹ்ரானுக்கு அரசாங்கம் சம்பளம் வழங்கியதை நானும் முஜிபுர் ரஹ்மானும் கலந்து கொண்ட ஹிரு தொலைக்காட்சியில் கெஹெலிய ரம்புக்வெல்ல பகிரங்கமாக திமிருடன் தெரிவித்தார்.அது மாத்திரமல்லாமல் பொட்டு அம்மானுக்கும் சம்பளம் வழங்கியதாக கூறினார்.சஹ்ரானை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட நாலக சில்வா திட்டமிட்டு நாமல் குமாரவின் கருத்தை வைத்து கைது செய்யப்பட்டார். 

நாலக சில்வாவிற்கு பயந்து சஹ்ரான் வெளிநாட்டில் இருந்ததாகவும் நாலக சில்வா 2018 ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டதும் மீள நாட்டிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.நாலக சில்வா பல பதக்கங்கள் வென்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி. சரத் பொனசேகா,கோட்டாபய ராஜபக்‌ஷ போன்றோரை காப்பாற்றியவர். 

நாலக சில்வாவை கைது செய்தது மஹிந்த,மைத்திரி மற்றும் கோட்டாபய கூட்டாகும். இந்த தாக்குதலுக்கான ஒரு அங்கத்தை மைத்திரி அவருக்ககே தெரியாமல் நிறைவேற்றியுள்ளார்.

நாமல் குமார கூறிய ஜனாதிபதி தாக்குதல் விசாரணை இன்று எங்கே என்று கோள்வி எழுப்பினார்.சுரேஷ் அல்விஸ் குறித்து அறிக்கையில் தகவல்கள் இல்லை.மலேசிய தூதரகத்தில் பாதுகாப்பு துறை சார்ந்த பிரதானியாக செயற்பட்ட வேலை இவரும் சஹ்ரானும் தெடர்பு பட்டனர்.இந்த தகவல்கள் அறிக்கையில் இல்லை.சஹ்ரானின் மனைவி வழங்கிய இரகசிய வாக்குமூலம் அறிக்கையிலும் இல்லை,பகிரங்கப்படுத்தவும் இல்லை.இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக சுரேஷ் அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சீனி வரி இலாப மோசடியில் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.1.5 பில்லியன் இலாபத்தை சூரையாடியுள்ளனர்.நெலும் குலுனவிற்கு 19.8 பில்லியனே முடிந்தது.இன்று சதோசவிலும் சீனி 85 ரூபா விற்பனை விலைக்கு இல்லை.நல்லாட்சியில் வரிக் குறைப்புச் செய்தோம்.அதன் பிரதிபலனை மக்கள் கண்டு கொண்டனர்.

சுற்றாடல் மாசுக்கெதிராக தொலைக்காட்சியில் கதைத்த ஒரு பிள்ளையின் வீட்டிற்கு மறு நாளே பொலிஸார் சென்று வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.அடுத்த தினம் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்று வினவியுள்ளனர். இது அரசாங்கத்தின் மிகவும் கீழ் தரமான செயலாகும்.கருத்துச் சுதந்திரத்திற்கு பாரிய சவாலாகும்.சுற்றாடல்வாதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இதற்கு எதிராகப் போராடுவோம் எனத் தெரிவித்தார். (RH)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.