இரணைதீவில் தற்போது 165 குடும்பங்கள் அட்டைப் பண்ணைகளை அமைத்து வசித்து வருவதாகவும் கொரோனா மரணங்களை இத்தீவில் அடக்கம் செய்ய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தினால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாக மாறியுள்ளதாக அப்பிரதேச மக்கள் விசனங்களைத் தெரிவித்துள்ளனர். 

இரணைதீவு பகுதியானது நீரேந்துப் பிரதேசமாகக் காணப்படுவதனால் கொரோனாத் தொற்றுள்ள சடலங்களை புதைப்பதால் நீரூடாகத் தொற்றுப் பரவ வாய்ப்புள்ளதாகவும் அம்மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதேவேளை, கொரோனா மரணங்களை அடக்கம் செய்வதற்கு தோண்டப்பட்டிருந்த குழிகளை அப்பிரதேச மக்கள் மூடிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.   (மு)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.