1. இலங்கை

தீர்மானம் தேவையில்லாதது, நியாயமற்றது எனத் தெரிவித்துள்ள இலங்கை, தீர்மானத்தை நிராகரித்ததுடன், மனித உரிமைகள் சபையின் கவனத்தை இலங்கை பெற வேண்டுமானால் அங்கத்துவ நாடுகளை ஆராயுமாறு கூறியிருந்தது. 

2. ஜப்பான்
இலங்கையில் மேம்பாடு தேவை என்பதை அங்கிகரித்த ஜப்பான், முன்னைய மனித உரிமை மீறல்களை விசாரிக்குமாறும்,இழப்பீட்டுத் தொகைகளை வழங்குமாறும் தெரிவித்துள்ளது. 

3. சீனா
மனித உரிமைகளை அரசியல் மயப்படுத்துவதற்கான சரியான உதாரணம் இலங்கைத் தீர்மானமெனத் தெரிவித்த சீனா, தீர்மானம் மீது வாக்கெடுப்பொன்றைக் கோரியதுடன், ஏனைய நாடுகளைத் தோற்கடிக்குமாறும் கோரியிருந்தது. 

4. பாகிஸ்தான்
இலங்கைக்கான புதிய பொறிமுறைக்கான செலவை கோடிட்டுக் காட்டிய பாகிஸ்தான், நடைமுறையின் வெளிப்படைத் தன்மையை தன்னார்வல பங்களிப்புகள் பாதிக்கும் என வாதிட்டிருந்தது. அதாவது, தீர்மானத்தை ஆதரிக்கும் நாடுகள் நிதியளிப்பதால் நடைமுறை பாதிக்கப்படும் எனக் கூறியிருந்தது. 

5. இந்தியா
மாகாண சபைகளை இயக்குவதற்காக உடனடியாக தேர்தல்களுக்கு கட்டாயம் இலங்கை அழைப்பு விடுக்க வேண்டும், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இந்தியா தெரிவித்திருந்தது. 

6. ஐக்கிய அமெரிக்கா
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில், இலங்கை மீதான முக்கிய தீர்மானமானது நிறைவேற்றப்பட்டிருப்பதானது, மோசமான குற்றங்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்காக தொடர்ந்தும் தண்டனைகளிலிருந்து தப்புவதை கோடிட்டிக் காட்டுவதாகவும், எதிர்கால விசாரணைகளுக்காக ஆதாரங்களைச் சேகரிப்பதை அங்கிகரிப்பதாகவும், ஜெனிவாவிலுள்ள ஐக்கிய அமெரிக்காவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

7. வெனிசுவேலா
புதிதாக முன்மொழியப்பட்டுள்ள ஆதாரம் சேமிக்கும் பொறிமுறையானது குற்றவியல் விசாரணையொன்றின் அங்கமொன்று எனத் தெரிவித்துள்ள வெனிசுவேலா, எதிர்கால மீறல்கள் குறித்த முன்னைய எச்சரிக்கையையும் விமர்சித்துள்ளதுடன், தீர்மானத்தை கொண்டு வரும் சில நாடுகளும் மனித உரிமைகளை மீறியுள்ளதாகக் கூறியுள்ளது.(Siyane News)

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.