உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கையை எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக அக்குழு தெரிவித்துள்ளது. 

இந்த குழு மூன்றாவது தடவையாகவும் கூடி ஆராய்ந்துள்ளதாக அதன் செயலாளர் சட்டத்தரணி ஹரிகுப்தா குறிப்பிட்டுள்ளார். 

இத்தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல், இது தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் என்பன தொடர்பாக இக்குழு விசேட கவனம் செலுத்தும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.   (மு) 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.