ஒவ்வொரு மாதமும் மார்ட்டின் தன்னுடைய பாட்டியை பார்க்க அவனது பெற்றோருடன் ஒரு புகையிரத்தில் சென்று பார்த்துவிட்டு மறுநாளே அதே புகையிரத்தில் வீடு திரும்பி வருவதை வழக்கமாக கொண்டிருந்தான்.
ஒருநாள் மரர்ட்டின் பெற்றோரிடம் கூறினான்..
"நான் இப்போ வளர்த்துவிட்டேன் தானே. நான் தனியாக பாட்டியை பார்க்க போகலாமா?"
ஒரு நீண்ட விரிவான சம்பாசனை, சிந்தனைகளின்பின் பெற்றோர் அவன் கோரிக்கையை ஏற்றுகொண்டனர்.
அவர்கள் மகனுடன் புகையிரத நிலையத்தில் புகையிரதம் வெளிக்கிடும் தருணம் வரை காத்திருந்தனர்.
மகன் புகையிரத்தில் ஏறிய பின், சாளரம் ஊடாக சில அறிவுரையை பெற்றோர் வழங்கினார்கள்.
அப்போ மார்ட்டின் பெற்றோருக்கு பதில்சொன்னான்,
"எனக்கு தெரியும், எனக்கு இதை ஆயிரம் தடவைகளுக்கு மேல் கூறிவிட்டீர்கள்"
புகையிரதம் மெதுவாக நகர ஆரம்பித்தபோது, தந்தை மகனில் காதில் முணுமுணுத்தார்,
"மகனே, நீ மனத்தளர்வாக, அல்லது ஆதரவுஅற்றதாக உணர்ந்தால், அப்போ இது உனக்கு"
என்று கூறி அவன் சட்டைப்பையில் எதையோ திணித்தார்.
-----
இப்போ மார்ட்டின் தனியாக 
தான் விரும்பியதுபோல் 
முதல்முறையாக தனியாக புகையிரதத்தில் பயணிக்கிறான்.
சாளரங்களினூடே இயற்கையை ரசித்து வியக்கிறான்,
அவனருகில் சில தெரியாதவர் தள்ளிக்கொண்டு அமர்ந்தனர்.
அவர்கள் நிறையவே சத்தமாகவும் இருந்தனர்.
புகையிரத பெட்டிகளில் இங்கேயும் அங்கேயுமாக திரிந்தனர்.
புகையிரத நடத்துனர் அவன் இந்த வயதில் தனியாக செல்வதுபற்றி ஏதோ கூறினார்.
பயணிகளின் ஒருவர் அவனை மிகவும் பரிதாபத்துடன், கவலையுடன் பார்த்தார்.
ஒவொரு கணமும் நகர நகர, மார்ட்டின் ஒரு அசௌகரியமான உணர்வை உணர்ந்தான்
இப்போ அவனுக்கு பயமே பற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது.
ஒரு மூலையில் முடக்கப்பட்டதுபோல் உணர்ந்தான்.
கண்கள் கலங்க கண்ணீருடன் தலையை குனிந்துகொண்டான்.
தன் தந்தை தன் சட்டைபையில் ஏதோ வைத்தது அவன் நினைவுக்கு வந்தது.
சற்று நடுக்கத்துடன் தந்தை கொடுத்த பொருளை தேடினான்.
கையில் கடிதம் ஒன்று கிடைத்ததும் அதை வாசித்தான்.
"மகனே, நான் இதே புகையிரத்தில் கடைசி பெட்டியில் உள்ளேன்"
இதுதான் வாழ்க்கை
எங்கள் பிள்ளைகளை தனியே சுயமாக பயணிக்க விடவேண்டும்,
அவர்கள் புது முயற்சிகளை செய்ய அனுமதிக்கவேண்டும்.
ஆயினும், எப்போதுமே, கடைசி பெட்டியில் தொடர்ந்து பயணிப்பதுபோல், அவர்கள் பயம் வராமல், தடங்கல் வராமல், என்னசெய்வது என்று தெரியாத தருணத்தில் ஆதரவு கொடுக்கக்கூடிய பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளவேண்டும்.
நாங்கள் பிள்ளைகளுடன், எம் இறுதிக்காலம் வரை அவர்களுக்கு நெருக்கமாகவே இருக்கவேண்டும்.
(தேடலில் கிடைத்த பதிவு, எழுதியவர் தெரியவில்லை)
#தமிழ் #மொழிபெயர்ப்பு  Giri Naga
°°°°°°°°°°°°°°°°°°°°°°°’°
Every month Martín’s parents took a trip to see Grandma and came home on the same train the next day. 
One day the child said to his parents:
′′I'm already grown up. 
Can I go to my grandma's alone?"
After a brief discussion, his parents accepted.
They stood with him as he waited for the train to exit.
They said goodbye to their son and gave him some tips through the window. 
Martin repeated to them:
′′I know. I've been told this more than a thousand times."
As the train was about to leave, his father murmured in his ear:
′′Son if you feel bad or insecure, this is for you!"
And he put something in his pocket.
Now Martin was alone, 
sitting on the train as he had wanted,
without his parents for the first time.
He was admiring the landscape out the window. 
Around him some unknowns pushed themselves in. 
They made a lot of noise.
They got in and out of the train car. 
The conductor made some comments about him being alone.
One person looked at him with eyes of sadness.
Martin was feeling more uneasy with 
every minute that passed. 
And now he was scared.
He felt cornered and alone. 
He put his head down, and
with tears in his eyes,
He remembered his dad had 
Put something in his pocket.
Trembling, he searched for what his father had given him.
Upon finding the piece of paper he read it:
′′Son, I'm in the last train car!".
That's how life is,
We must let our kids go
We must let them try new things. 
But we always like to be
In the last car, watching,
in case they are afraid 
or in case they find obstacles and don’t know what to do.
We want to be close to them.
as long as we are still alive. 
(Adapted from Unknown author)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.