தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தி.மு.க. தகவல்கள் தெரிவித்துள்ளன. 


தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் திகதி நடைபெற உள்ளது.  

இந்நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம்  கையெழுத்திடப்பட்டுள்ளது.  தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகிதீன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளதாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.  

இதேவேளை, பா.ஜ.க.வின் சதியை முறியடிக்க திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 

திமுக கூட்டணியில் மனித நேய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   (மு) 
 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.