மேல் மாகாணத்தில் இதுவரையில் கல்வி நடவடிக்கைள் ஆரம்பிக்கப்படாதிருந்த 5,11,13 தர வகுப்புக்கள் தவிர்ந்த ஏனைய வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் திங்கட்கிழமை (29) முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் எழுத்து மூலமான அனுமதி நேற்று (23) கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

நாடு முழுவதிலும் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று நடைபெறும் என்று குறிப்பிட்ட அமைச்சரிடம் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதியுண்டா? என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

இதற்கு மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு இதுவரையில் அனுமதி வழங்கவில்லை. தனியார் பாடசாலைகள் சர்வதேச பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சித்திரை விடுமுறைக்கு பின்னர் மேல் மாகாணத்தில் உள்ள குறிப்பிட்ட தர வகுப்பு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருந்தோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாடசாலைக்கான சித்திரை விடுமுறை தொடர்பில் குறிப்பிடுகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி விடுமுறை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.