நாட்டில் தற்போது நிலவும் வறட்சியுடன் கூடிய காலநிலை நாளை முதல் மாற்றமடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

நாட்டின் பல பாகங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  (மு) 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.