உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொண்ட குண்டுதாரிகளுடன் தொடர்புகளை வைத்திருந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப் போவதாக சட்ட மா அதிபர் இன்று கொழும்பு கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்கு அறிவித்தல் விடுத்துள்ளார். 

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பான வழக்கு விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்ட மா அதிபர் இந்த அறிவித்தலை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவர்களை எதிர்வரும் மார்ச் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் இன்று மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  (மு)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.