முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கும் அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொகமட் ரூமிக்கும் எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று (02) அறிவித்துள்ளது. 

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் கடத்தல் விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு நடாத்தியமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.  (மு)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.