இம்தியாஸ் எம்பி - அமெரிக்கா, மாலைதீவு தூதரக அரசியல் அதிகாரிகளுக்கிடையில் விஷேட சந்திப்பு

Rihmy Hakeem
By -
0

 ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காருக்கும் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விவகார அதிகாரிகளுக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று இன்று(11) மாலை எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் நாட்டின் சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. 

இந் நிகழ்வில் அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரியான ஜெப்ரி டி சானினுடன்(Geoffrey D.Chanin),  தூதரக உள்ளக அரசியல் விவகார அதிகாரிகளான நஸ்ரின் மரிக்கார்,சதுரி திஸாநாயக்க ஆகியோர் பங்கேற்றனர். (RH)





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)