கொழும்பு 11, டாம் வீதி - ஐந்துலாம்பு சந்தி பகுதியில் பயணப் பையில் பெண்ணொருவரின் சடலத்தை வைத்து தலைமறைவான உப பொலிஸ் பரிசோதகர் படல்கும்புர ஐந்தாம் கட்டை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்  பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரேத பரிசோதனைகள் இன்று (03) இடம்பெறவுள்ளதுடன், அதன் பின்னர் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபரை கைதுசெய்ய சென்ற போது, அவர் நேற்று தனது வீட்டிலிருந்து தப்பிச்சென்ற நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், 52 வயதான குறித்த நபர், புத்தல பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகரென கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்தி பகுதியில் பயணப் பையில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவேளை குருவிட்டை பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த பெண்ணுடையது என சந்தேகிக்கப்படும் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, சந்தேகநபர் பதுல்கும்புரவில் அமைந்துள்ள அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேற்கொள்ளபட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் புத்தல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் விடுமுறையில் சென்றுள்ள உப பொலிஸ் பரிசோதகர் என தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணும், அவரை பயண பொதியில் கொண்டு வந்து டேம் வீதியில் விட்டு செல்லும் நபரும், கடந்த 28 ஆம் திகதி ஹங்வெல்லை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள விடுதி ஒன்றிற்கு செல்லும் காட்சி சீ.சி.ரி.வியில் பதியுள்ளது.

மறுநாள் அந்த விடுதியில் இருந்து பயண பொதியொன்றுடன் சந்தேகநபர் மாத்திரம் வெளியேறும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து சந்தேகநபர் ஹங்வெல்லையில் இருந்து புறக்கோட்டைக்கு பயணிக்கும் பேருந்து ஒன்றில் ஏறும் சிசிடிடி காட்சியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.