தான் நாட்டை பாதுகாப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த 'சேர்' இடமிருந்து தற்போது நாட்டை பாதுகாக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். 

நேற்றைய தினம் (15) ஐக்கிய மக்கள் சக்தியின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இடம்பெற்றிருந்ததது. இதன் போது உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நான் இங்கு வரும் போது பேஸ்புக் பதிவொன்றை பார்த்தேன். அதில் இருந்தது, முன்பு வீட்டில் சீனி சாப்பிட்டதாக கூறினால் எமக்கு ஞாபகம் வருவது ஒன்றோ எறும்புகளை அல்லது 'அந்தரே' இனை. ஆனால் தற்போது ஞாபகம் வருவது, மிஸ்டர் நந்தசேன கோட்டபாயவினை. 

ஆரம்பத்திலே கூறுகிறேன். ரஞ்சன் ஐயா, உங்களுக்காக நாம் போராடுவோம். தம்பி அவர்கள் அனைவரும் கள்வர்கள் என்று கூறியதற்காக ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது நந்தசேன அவர்கள் கிராமங்களுக்கு சென்று மக்களது குறைகளை கேட்காமல் தனது குறைகளை மக்களிடம் கூறி வருகிறார். நான் பெயில் இல்லை. எனக்கு இரு பெயர்கள் உள்ளன என்று கூறி வருவது வெட்கக்கேடானது. 

இந்த சீனி மோசடி ஒரு விடயம் மட்டுமே. இன்று பொருட்களின் விலை மிகவும் உயர்வடைந்துள்ளது. எமது அணியில் உள்ள ஒருவரும் மோசடிகளில் ஈடுபடாதவர்கள் என்பதனை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.

கொலை செய்து, பொய்யாக நடந்து, ஆணைக்குழுக்களை நியமித்து வேலையில்லை. மேலே உள்ளவன் உங்களுக்கு தண்டனை கொடுத்தே தீருவான் என்றும் தெரிவித்தார். (Siyane News) 





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.