இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்  மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு  முறைப்பாடொன்றை செய்துள்ளது.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் அதிபர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட தரப்பினருக்கு கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் மற்றும்  இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் முன்வைத்த கோரிக்கையை பொருட்படுத்தாமை குறித்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை ஆரம்பிக்கும் முன்னர் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என, சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.