கிளிநொச்சி மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் பெண்பிரதிநிதிகள் நேற்று (24) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

கிளிநொச்சி மாவட்டம் கடந்த 30 வருட காலத்திற்கு மேலாக யுத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வருகின்ற நிலையில் பொருளாதாரத்திலும் கல்வியிலும் மீண்டும் பின்னடைவுகளை எதிர்நோக்க வேண்டிய அபாய நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபானம், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் பாவனை பல குடும்பங்களை சீர்குலைத்து வருகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் குடும்பவன்முறைகள், பிள்ளைகளின் கல்வி நிலை பாதிப்பு, சிறுவர் துஸ்பிரயோகம், சிறுவர்  மற்றும் பெண்கள் உளவியல் ரீதியான பாதிப்பு, கொலைகள், தற்கொலைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஆகியன அதிகரித்து வருகின்றன.

ஆகவே நாம் சமூக பொறுப்புள்ள பெண் அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில் இவற்றில் கவனம் செலுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.

குறிப்பு:- கிளிநொச்சியில் அண்மையில் இடம்பெற்ற கொலைகள், சிறுவர் கொலைகள் அனைத்திற்கும் சட்டவிரோத மதுவே காரணம்.

அந்த வகையில் ஐந்து அம்சங்களைக் கொண்ட கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினரிற்கு முன்வைக்கும் முகமாக இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளோம்.

எமது கோரிக்கைகள் பின்வருமாறு:

1. கிளிநொச்சி மாவட்டத்தில் சட்விரோத மதுஉற்பத்தியை தடை செய்ய அனைத்து தரப்பும் முன்வரவேண்டும்.

2. சட்டவிரோத மது போதைப்பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க பொலிசார், மதுஒழிப்பு திணைக்களம் மற்றும் நீதித்துறை முன்வரவேண்டும ;.

3. வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை சட்டவிரோத செயற்பாடுகளுக்கு மூலகாரணமாக அமைந்திருக்கின்றது. ஆகவே வேலைவாய்ப்பையும் வாழ்வாதார உதவிதிட்டங்களையும் மக்களுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும்

4. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப்பிரிவினூடாக கண்காணித்து கல்வி செயற்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும்.

5. கிளிநொச்சி மாவட்டமானது அதிகமானோர் விவசாயம் தன்னாதிக்கம் கொண்டவர்கள் அதேபோன்று பனை, தென்னை வளங்களை கொண்டுள்ள பிரதேசமாகும். ஆகவே நலிவுற்றிருக்கும் எமது உள்ளுர் மதுபான உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும ; உயர்த்த அரசு மற்றும் மாகாண திணைக்களங்கள், பனைதென்னை அபிவிருத்தி சங்கங்கள் முன்வரவேண்டும்.

இக்கோரிக்கைகளை ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுனர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் மற்றும் பொறுப்புவாய்ந்த திணைக்களங்கள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி நிற்கின்றோம்.

கிளிநொச்சி மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் பெண்பிரதிநிதிகள்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.