(அஸ்ரப் ஏ சமத்)
சிரேஷ்ட ஊடகவியலாளா் எம்.ஏ.எம் நிலாமின் பவள விழாவும், அவரது "தட்டுத் தாவாரம்" கவிதை நுால் வெளியீடும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவா் என்.எம் அமீன் தலைமையில் மினுவான்கொடை, கல்லொழுவை ஹில்சைட் வரவேற்பு மண்டபத்தில் நேற்றைய தினம் (20) நடைபெற்றது.
பிரதம அதிதியாக நீதியமைச்சா் அலி சப்றி, கௌரவ அதிதிகளாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுத்தீன், கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயா் எம். இக்பால், மற்றும் அஸ்ரப் அசீஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் தலைமையுரையை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் நிகழ்த்தினார்.
மேலும் நாச்சியாதீவு பர்வீன் , தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியா் செந்தில்வேலா், தினகரன் ஊடகவியலாளா் தௌபீக் ஆகியோரும் உரைகளை நிகழ்த்தினர். கவிநுால்ஆய்வுரையை கலைவாதி கலீல் நிகழ்த்தியதுடன், சட்டத்தரணி ரசீத் எம். இம்தியாஸ், கவிஞா் அக்பா் அலி, கவிஞா் ஹசீர் ஆகியோர் கவி வாழ்த்துப்பாடினர். (Siyane News)