நவீன உலகிற்கு முகங் கொடுக்கக் கூடிய தொழில் முறை திறன்களைக் கொண்ட ஊடக வல்லுனர்களை உருவாக்குவதற்காக எதிர்வரும் சில மாதங்களுக்குள் ஊடக ஆய்வு நிறுவனமொன்றை அமைக்க வெகுஜன ஊடக அமைச்சு திட்டமிட்டுள்ளது.

'சுபீட்சத்தின் நோக்கு' எனும் கொள்கைப் பிரகடனத்தின் கீழ் ஊடகக் கற்கைக்கான உயர்கல்வி நிறுவனமாக இது ஸ்தாபிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிகவும் திறமையான ஊடக வல்லுனர்களை உருவாக்குவதற்காக சர்வதேச தரத்திற்கேற்ப அரச அனுசரணையுடன்   இந்தக் கல்வி நிறுவனம் உருவாக்கப்படும்.

இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (15) வெகுஜன ஊடக அமைச்சில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் தலைமையில் இடம்பெற்றது. (RH)

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.