புதிய மின்சார உற்பத்தி மறுமலர்ச்சிக்கு துருக்கி ஆதரவு வழங்கவுள்ளது

Rihmy Hakeem
By -
0

 


இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யும் டீசல் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு பதிலீடாக தேசிய மின்சாரப் பயன்பாட்டில் 70% வீதத்தினை நிலைபேறான மற்றும் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யும் நோக்கிலமைந்த தேசிய மின்னுற்பத்தி திட்டத்திற்கு தேவையான ஆதரவினை வழங்க துருக்கி தயாராக இருப்பதாக இலங்கைக்கான துருக்கி தூதுவர் திருமதி Demet Sekercioglu தெரிவித்துள்ளார்.

அண்மையில் மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகபெரும அவர்களுடன் இடம்பெற்ற உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் போதே துருக்கி தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். (RH)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)