சீனி தொடர்பில் நிச்சயமாக மோசடி ஏற்பட்டிருக்கிறது என்று நாம் பாராளுமன்றத்தில் கூறினோம். அதில் மோசடி நடைபெற்றுள்ளது என்று தெளிவாக தெரிகிறது. ஏனென்றால் வரிக்குறைப்பு என்பது இறுதியாக மக்களுக்கு சென்றடைய வேண்டும். வாடிக்கையாளர்கள் பயனடைய வேண்டும். இடையிலுள்ள தரகர்கள் பயனடையக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதய குமார் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (24) எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எமது Siyane News இன் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏனெனில் 50 ரூபாவுக்கு இருந்த சீனி இறக்குமதி வரி வெறும் 25 சதத்திற்கு குறைக்கப்பட்டது. அதாவது 49.75 ரூபா குறைக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை கணிப்பிடும் போது 1590 கோடி ரூபா அரசாங்கத்திற்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. அப்படியாயின் சீனி வரி குறைப்பினால் பயனடைந்தது யார்? அல்லது அதற்கு வழிவகுத்தது யார்? என்பதனை நாம் சிந்திக்க வேண்டும். 

அதனால் தான் நாம் கூறுவது, இதனை உடனடியாக வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். அல்லது கணக்காய்வு செய்யப்பட வேண்டும். அரசு ஏற்கனவே பல ஆணைக்குழுக்களை அமைத்துள்ளது. எனினும் எதிலும் முடிவுகள் வந்ததாக தெரியவில்லை. இதன் உண்மை நிலை தெரிய வேண்டும்.

மக்களுக்கு இந்த வரிக்குறைப்பினால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று நேற்று கூட பாராளுமன்றில் அமைச்சர்களும் உறுப்பினர்களும் தெளிவாக கூறினார்கள். அரசாங்கம் மக்கள் சார்பாக நடைபெறுகிறா? அல்லது வியாபாரிகள் சார்பாக நடைபெறுகிறதா? என்ற சந்தேகமும் எழுகிறது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.