11 முஸ்லிம் அமைப்புக்களை தடைசெய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதனை தொடர்ந்து  இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேற்படி அமைப்புக்களுடன் தொடர்புடைய நபர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லாம் என்ற சந்தேகத்தில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்புக்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளதால், இலங்கையில் தங்கியிருந்து தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக அவர்களின் இலக்கு இந்தியாவாக இருக்கலாம் என்று நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (13) 11 முஸ்லிம்  குழுக்களை இலங்கையில் தடைசெய்வது குறித்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.