27 பொருட்களுக்கு சதோச நிறுவனம் சலுகை வழங்கின்றது. நுகர்வோரின் கோரிக்கைக்கு அமைய இந்த நடைமுறையை மேலும் மூன்று மாதங்களுக்கு அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக சதோச நிறுவனத்தின் உபதலைவர் துஷார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சந்தையின் தீர்மானமிக்க சக்தியாக சதோச நிறுவனம் செயற்படுகின்றது. சலுகைப் பொதிக்கு பாரிய கிராக்கி நிலவுகின்றது என்று சதோச நிறுவனத்தின் உபதலைவர் துஷார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
(Siyane News)