சட்டவிரோதமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 658 மதுபான போத்தல்களுடன் சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கடந்த 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கொள்ளுபிட்டியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் போக்கில் கொள்கலன் ஒன்றில் குறித்த மதுபான போத்தல்களை நுட்பமான முறையில் மறைத்து வைத்து கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.