ரயில்வே திணைக்களத்தினால் துரித தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் பயணிகள் தமது ரயில் பயணத்தின் போது எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை முறையிடுவதற்கான ரயில்வே திணைக்களம் தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிவித்துள்ளது.

அந்த தொலைபேசி இலக்கம் 1971 என்பதாகும்.

பயணிகள் ரயில் சேவைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை இந்த துரித தொலைபேசி இலக்கத்தினூடாக அறிவிக்க முடியுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ரயில் சேவைகள் தொடர்பான மேலதிக தகவல்களையும் இந்த இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிந்துகொள்ள முடியுமென ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. (siyane news)

அரசாங்க தகவல் திணைக்களம்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.