2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி நவுபர் மௌலவி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர இன்று நடைபெற்ற விஷேட செய்தியாளர்களுடனான சந்திப்பில் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் நவுபர் மௌலவி தற்பொழுது தடுப்பு காவலில் இருப்பதாக தெரிவித்தார்.

சஹரான் என்பவருக்கு தீவிரவாத கருத்துக்களை நௌபர் மௌலவியே போதித்திருக்கிறார். 2016ஆம் ஆண்டில் இது இடம்பெற்றிருக்கிறது. 2014ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகளின் தீவிரவாத சிந்தனைகளை நௌபர் மௌலவியே நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார். ஹஜ்ஜூல் அக்பரும் தாக்குதல் சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

குண்டு சம்பவத்துடன் தொடர்புபட்ட சாரா ஜெஸ்மீன் என்பவர் உயிரிழந்துள்ளாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. இவர் தொடர்பான னுNயு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவருடன் தொடர்புபட்டவர்களின் சடலங்கள் துண்டு துண்டாக காணப்படுகின்றன. இவற்றை எடுத்து மீண்டும் னுNயு பரிசோதனை மேற்கொள்வது மிகவும் கடினமானது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 212 பேர் தடுப்பு காவலில் இருப்பதாக கூறினார். சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்ட 32 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக சட்டமா அதிபரிடம் அதற்கான விசாரனை ஆவணங்கள் கையளிக்கப்படடிருப்பதாகவும் கூறினார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலத்த அமைச்சர் சட்டங்களில் உள்ள குறைகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பித்து செல்லாதிருப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களம் இது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தில் உள்ள குறைபாடுகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிச் செல்லும் பட்சத்தில் அரசாங்கத்தின் மீதே குறை கூறப்படும். இதனாலேயே சட்டமா அதிபர் திணைக்களம் விரிவான முறையில் ஆராய்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனால் ஏற்படும் கால தாமத்தை குறை கூற முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வியாபாரி இப்ராஹிம் வசதி படைத்தவர். இவருக்கு பணம் எவ்வாறு வந்து சேர்ந்தது. இவருக்கும் சஹ்ரானுக்கும் இடையில் தொடர்புகள் உண்டா ? என்பது கண்டறியப்பட வேண்டும். இவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் நோக்கம் என்ன என்பதும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னரும் பின்னரும் பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகள் எவ்வாறு செயல்பட்டனர்;. கடமை தவறிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கும் பொலி;ஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எட்டு சம்பவங்கள் இடம்பெற்ற பின்னரே 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த காலப்பகுதியில் பொலிஸாரின் நடவடிக்கை குறித்து விசாரிக்கப்படுகிறது. தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் இருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். விசாரணைகளை குறை கூறி காலம் கடத்துவதிலும் பார்க்க குண்டு தாக்கதலுடன் தொடர்புடைய தகவல்கள் ஏதும் இருந்தால் அவற்றை புலனாய்வு பிரிவிற்கு வழங்கி விசாரணைக்கு உதவ முன் வருமாறு விசாரணைகளை குறை கூறுபவர்களுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

சம்பவம் தொடர்பில் தேவைப்பட்ட 54 பேரில் 50 பேர் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 30 வருட கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு புலனாய்வு பிரிவினர் மிகவும் சிறப்பான முறையில் செயற்பட்டனர். ஆனால் நல்லாட்சி காலத்தில் இந்த புலனாய்வு பிரிவு சீர்குழைந்தது. இது தொடர்பில் அப்போதைய நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை. மாறாக அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். குண்டு தாக்குதல் சம்பவத்தை தடுக்காமைக்கு இதுவும் ஒரு காரணம் என்றும் சரத் வீரசேகர கூறினார்.

தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்களுக்கு எதிரான நடவடிக்ககை மேற்கொள்வதில் நீண்டகாலம் செல்லலாம். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணை நீண்டகாலமாக இடம்பெற்றது. அதன் பின்னரே குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது என்பதையும் அமைச்சர் சுட்டடிக்காட்டினார். (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.