கொழும்பு துறைமுக நகரம் கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்டமூலம் நாட்டில் வேறு நாட்டை உருவாக்குவதாக முன்னெடுக்கப்படும் பிரசாரத்தை முற்றாக நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை குடியரசிற்கு சொந்தமான நிலப்பரப்பு எப்பொழுதும் இலங்கை வசமே இருக்கும். அதன்படி, கொழும்பு துறைமுக நகரம், கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)

Live Now | කොළඹ වරාය - නගරය බොරුව සහ සත්‍ය | Colombo Port City - Fact and Fiction

Live Now | කොළඹ වරාය - නගරය බොරුව සහ සත්‍ය | Colombo Port City - Fact and Fiction

Posted by Department of Government Information - Sri Lanka on Sunday, April 18, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.